பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சின்னக்கடை வீதியில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பாபர் மசூதி இடிப்பிற்கு நீதி கேட்டும், வக்பு வாரியம் மற்றும் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், பாபர் மஸ்ஜித் இடத்தை மீண்டும் பாபர் மஸ்ஜித்இஸ்லாமியர்களிடம் திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தியும், சட்ட விரோத இடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் கோரியும் மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று கையில் பதாகைகளை ஏந்திய படி கண்டன கோஷங்களை எழுப்பினர்.


















