மயிலாடுதுறையில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்ப உரிமைகுரல் ஓட்டுநர் தொழிற்ச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது :-
மயிலாடுதுறையில் ஓட்டுநர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, “உரிமைக் குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம்” சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் பாலமுருகன் உட்பட நூற்றுக்கணக்கான ஓட்டுநர்கள் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சொந்த வாகனங்கள் வணிக ரீதியாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் , வெள்ளை நிறப் பலகை (White Board) கொண்ட சொந்த உபயோக வாகனங்களை சட்டவிரோதமாக வாடகைக்கு இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ,
அரசு அலுவலகங்களில் தனியார் வாகனப் பயன்பாடு: அரசு அலுவலகங்களில் சட்டத்திற்குப் புறம்பாக சொந்த வாகனங்களை மாத வாடகைக்கு பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் ,வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு வாடகை வாகனங்களை (Yellow Board) மட்டுமே பயன்படுத்த வேண்டும் ,மேக்ஸி கேப் (Maxi Cab) வாகனங்களுக்கு தற்போதுள்ள 12+1 இருக்கை அனுமதியை (Permit) உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
