தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக தமிழக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..”
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்.. சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்த தமிழக அரசை எதிர்த்து கோஷங்கள் எழுப்பி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கொடிமங்கலம் பகுதியில் கறி கோழி குஞ்சு வளர்ப்பதற்கு உற்பத்தி மானியமாக விவசாயிகளிடம் தனியார் கார்ப்பரேட் நிறுவனம் 6.50 ரூபாய் விலை நிர்ணயித்து 10 ஆண்டுகளுக்கு முன்னதாக போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் உற்பத்தி மானியம் வழங்கி வந்தது..
ஆனால் தற்போது இடு பொருள்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால்.. விவசாயிகளுக்கு நிறுவனம் கொடுக்கும் மானியம் போதுமானதாக இல்லாத காரணத்தினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்..
இதனால் தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தின் நிறுவன தலைவர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி கறிக்கோழி விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் 20 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்து பல போராட்டங்களை நடத்தியுள்ளார்.. ஆனால் இது குறித்து செவி சாய்க்காத தமிழக அரசு..,
பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் ஈசன் முருகசாமி மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளது… என்றும்
கார்ப்பரேட் நிறுவனத்திற்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை துணை போனதாகவும்..ஈசன் முருகசாமி மீது தொடுத்த வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்றும்.. அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்..
டெல்டா ஒருங்கிணைப்பாளர் கந்தவேல், பொறுப்பாளர்கள் கோவிந்தராஜ், பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.
பேட்டி: கந்தவேல்,
டெல்டா ஒருங்கிணைப்பாளர்,
தமிழக விவசாய பாதுகாப்பு சங்கம்.
