மகாத்மா ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்தும் V.P.G.ராம் ஜி பெயர் மாற்றத்தை  திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி நூறு நாள் தேசிய ஊரக வேலை உறுதி வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்தும் அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்தும் திமுக தலைமையில் இண்டியா கூட்டணி கட்சியினர் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் அருகேயுள்ள கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே இந்தியா கூட்டணி கட்சி சார்பில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது

.கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக ,காங்கிரஸ்,விசிக, கம்யூனிஸ்ட்கள் ,தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் 2000 த்திற்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி திட்டத்தை முடக்க நினைப்பதை கண்டித்தும் விபி ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் நடுவே பேசிய திமுக எம் எல் ஏ லட்சுமணன் சமீப காலமாக தமிழ்நாடு மீது மத்திய பாஜக அரசு பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருவது அனைத்தையும் எதிர்த்து தமிழக முதலமைச்சர் வெற்றி பெற்று வருவதாகஅரசு கூறினார்.

மேலும் மத்திய அரசு ஒருசில மாநிலங்களில் 90 சதவிகிதம் நிதியும் ஒருசில மாநிலங்களுக்கு 60 நிதியை மட்டும் வழங்குவதாகவும் மீதமுள்ள நிதியை மாநில அரசே வழங்க வேண்டுமென சட்டம் கொண்டுவந்துள்ளதற்கு தமிழக அதிமுக உடந்தையாக இருப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version