மகாத்மா காந்தி நூறு நாள் தேசிய ஊரக வேலை உறுதி வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்தும் அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்தும் திமுக தலைமையில் இண்டியா கூட்டணி கட்சியினர் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் அருகேயுள்ள சிந்தாமணி ஸ்டேட் பேங்க் வங்கி அலுவலகம் எதிரே இந்தியா கூட்டணி கட்சி சார்பில் விக்கிரவாண்டி திமுக சார்பில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது
.கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக ,காங்கிரஸ்,விசிக, கம்யூனிஸ்ட்கள் ,தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் 2000 த்திற்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி திட்டத்தை முடக்க நினைப்பதை கண்டித்தும் விபி ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் நடுவே பேசிய திமுக எம் எல் ஏ அன்னியூர் சிவா அனைத்தையும் எதிர்த்து தமிழக முதலமைச்சர் வெற்றி பெற்று வருவதாக கூறினார்.














