மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நடைபெற்ற வரும் முறைகேடுகனளை கண்டித்து போராட்டம்யிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நடைபெற்ற வரும் முறைகேடுகனளை கண்டித்து போராட்டம் நடத்த வந்த விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்ததை. முறைகேடுகள் குறித்து சராமாரியாக கேள்வி எழுப்பி நடவடிக்கை எடுக்கவும், வெளிமாநில நெல் விற்பனையை தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 96 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடைப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய நான்கு தாலுகா பகுதிகளில் 140 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிரந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. புதிய விலை நடைமுறைக்காக கடந்த மாதம் 26ம் தேதி முதல் கொள்முதல் நிறுத்தப்பட்டு 2ம் தேதிக்கு பிறகு புதிய விலையில் கொள்முதல் தொடங்கியது. இந்த இடைபட்டகாலத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்கள் அதிக அளவில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் தேங்கியதால் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளை அடுக்கிவைத்துக்கொண்டு காவல்காக்க வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு முற்றுகைபோராட்டம் நடத்தபோவதாக தெரிவித்து திறண்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து நுகர்பொருள்வாணிபக்கழக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணலாம் என்று போலீசார் உறுதி அளித்ததையடுத்து நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் நலினா, முதுநிலை மேலாளர் தரக்கட்டுப்பாடு செந்தில், துணை மேலாளர் கொள்முதல் இயக்கம் கண்ணன் ஆகியோர் தலைமையில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இயற்கை விவசாயி ராமலிங்கம், டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் அன்பழகன் உட்பட பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் கலந்துகொண்டு பேசுகையில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் மோட்டா ரக நெல் கொள்முதல் செய்யப்படாமல் அதிக அளவில் தேங்கி கிடக்கிறது அதனை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். வெளிமாநில, வெளிமாவட்ட நெல்மூட்டைகள் தனியார் வியாபாரிகள் கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். அதற்கான சிட்டா அடங்களை அந்தந்த கிராம விஏஓக்கள் வழங்குகின்றனர். சாகுபடி பறப்பைவிட அதிக அளவில் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் இயற்கை இடர்பார்டுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு, நிவாரணம் கிடைக்காமல் பாதிக்கப்படுவதால் விஏஓக்கள் சிட்டா அடங்கல் முறைகேடாக வழங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கொள்முதல் நிலையத்தில் சிப்பத்திற்கு 40 ரூபாய்க்கு மேல் பணம்கேட்டு விவசாயிகளை அலைகழிப்பதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மோட்டா ரக நெல் தேக்கமின்றி கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், அதிக பணம்கேட்டு அலைகழிக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், வெளிமாநில நெல் வரத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.