ஒன்றியஅரசு தொழிலாளர்களுக்கு விரோதமான 4 தொகுப்பு சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவந்ததை கண்டித்து தமிழக கட்டிடதொழிலாளர்கள் மத்திய சங்கத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் ரயில் நிலையம் முன்பு
தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் கட்சி மற்றும் தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்தியசங்கம் , அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் ஒன்றிய அரசு தொழிலாளர்களுக்கு விரோதமான 4 தொகுப்பு சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வந்ததை கண்டித்தும் , பழையசட்டம் சட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தக்கோரியும் , தொடர்ந்து தொழிலாளர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் கட்சி மாநிலபொருளாளர் சேகர், திமுக திருவாரூர் மாவட்டசெயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ , நகரச் செயலாளர் வாரைபிரகாஷ் உட்பட கட்டிடதொழிலாளர்கள் கலந்து கொண்டு உட்பட கலந்துகொண்டனர்anti-worker















