மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றிய பாசிச மோடி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.! மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர்
திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் மத்திய பாஜக அரசு கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் பெயரை அவமதிக்கும் வகையில்
பெயரை மாற்றியதையும் கண்டித்து
ராகுல்காந்தி,சோனியா காந்தி,ஆகியோர் மீது அமலாக்கத்துறையினர் பொய்யான வழக்குகளை தொடுத்ததின் காரணமாக உச்ச நீதிமன்றம் அவர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என அமலாக்க துறைக்கு எதிராக தீர்ப்பு வந்தது
இதனை கண்டித்து திருப்பத்தூர் காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் பரத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பிரபு கலந்து கொண்டு கண்டன கோஷல் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் இருந்து
காமராஜர் சிலை வரை மெழுகுவர்த்தி ஏந்தி பேரணையாக வந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட தலைவர் பிரபு கூறுகையில்,
அமலாக்கத் துறையினர் பொய்யான வழக்குகளை கொடுத்துள்ளனர் பொதுமக்களை சேர்த்து அமலாக்கத்துறை மீது போர் செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார்.