வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கையை எதிர்த்து தமிழக முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன.
சென்னை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட 43 இடங்களில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கட்சியினரும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளத்தில் ஆர்ப்பாட்டப் புகைப்படத்தை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது :
“எஸ்ஐஆர்-ஐத் தடுக்கவே இப்போதைய மிகப் பெரிய கடமை. மக்களாட்சியின் அடிப்படை உரிமையான ஓட்டுரிமையைப் பறிக்க முயலும் இந்த நடவடிக்கைக்கு எதிராக நாம் சட்டப் போராட்டத்திலும், களப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எஸ்ஐஆர் பணிகளில் நடைபெறும் தவறுகளைத் தடுப்பதற்காக “வார் ரூம்” மற்றும் “ஹெல்ப் லைன்” அமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும், தமிழகம் முழுவதும் பதாகைகள் ஏந்தி களத்தில் இறங்கியுள்ள கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவித்தார்.
“நம் மக்களின் ஓட்டுரிமையைப் பாதுகாக்க தொடர்ந்து செயலாற்றுவோம்,” என்று தனது பதிவை முடித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
