உளுந்தூர்பேட்டை தாலுக்கா அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நாம் தமிழர் கட்சிதலைவர் சீமானை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நகரச் செயலாளர் வி.சந்திரா தலைமையில் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் வரதட்சணை பிரச்சனையில் இறந்து போன ரிதன்யா என்ற பெண்ணிற்காக மாதர் சங்கங்கள் ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் குரல் எழுப்பினீர்களா ?என்று அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் அவர்களை கண்டித்து அவருடைய உருவப்படத்தை எரித்தும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜனநாயக மாத சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் பி.சுகந்தி சீமான் தொடர்ச்சியாக பொதுவெளியிலும்,அரசியல் மேடைகளிலும்பெண்கள் குறித்து ஆபாசமான வார்த்தைகளை பேசுவதையும், பெண்கள் கண்ணியத்தை குறைக்கும் விதத்தில் தொடர்ந்து பேசி வருவதையும் ஜனநாயக மாத சங்கம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இளம் பெண் ரிதன்யாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு மாதர் சங்கம் திருப்பூர் மாநகரில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது அனைவரும் அறிந்த விஷயமே,அடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சீமான் அவர்கள் இந்த மரணம் குறித்து மாதர் சங்கங்களும் முற்போக்கு அமைப்புகளும் எங்கு சென்றார்கள் பல சம்பவங்களுக்கு போராட்டம் நடத்தும் மாதர் சங்கம் இப்போது கொக்கைனோ, கஞ்சாவோ மதுவோ அருந்திவிட்டு போதையில் இருக்கின்றார்களா என்று மாதர் சங்கத்தை தரக்குறைவாக பேசியுள்ளார்.
சீமான் இதுபோன்று முன்னுக்குப் பின் முரணாக பேசுவது இது முதல் முறையல்ல எனவே தமிழக அரசாங்கம் காவல்துறையும் இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார், இதனைத் தொடர்ந்து சீமானை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி உருவப்படத்தை கொளுத்தியும் ஜனநாயக மாதர் சங்க அமைப்பினர் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் அகில இந்திய துணைத் தலைவர் பி.சுகந்தி,மாவட்ட செயலாளர் ஏ.தேவி,மாவட்டத் தலைவர் இ.அலமேலு,உளுந்தூர்பேட்டை நகர செயலாளர் சந்திரா,உளுந்தூர்பேட்டை கிழக்கு செயலாளர் ரீட்டா,திருநாவலூர் மேற்குச் செயலாளர் மணிமேகலை,தலைவர் பாக்கியலட்சுமி, உளுந்தூர்பேட்டை மேற்குச் செயலாளர் அஞ்சலை,மாவட்ட குழு உறுப்பினர் விசாலாட்சி,மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.