மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பெயரை மாற்றி 100 நாள் வேலை திட்டத்தை முடக்கும் மத்திய அரசை கண்டித்தும் அதற்கு துணை நிற்கும் அதிமுகவை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் எம்.எல்ஏ நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சி மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ்குமார், கீழ்வேளூர் எம்எல்ஏ நாகை மாலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, மக்கள் நீதி மையம், மனிதநேய ஜனநாயக கட்சி, சிபிஎம்எல், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்















