சோனியாகாந்தி, ராகுல்காந்தி மீது பொய் வழக்கு போட்டு ஜனநாயக விரோத செயல்களில் பாஜக அரசு ஈடுபட்டு வருவதாக கூறி திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சியினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மோடி தலைமையிலான பாஜக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இரண்டாயிரம் கோடி ரூபாய் பணம் மோசடி வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டதை தொடர்ந்து. திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் மாவட்ட தலைவரும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மோடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மீது பொய் வழக்கு போடும் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசே பதவிவிலகு, பதவிவிலகு என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மணவாளநகரில் அமைந்துள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் மாலை அணிவித்து. கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஒண்டிகுப்பம் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட பேரணியாக சென்றனர் அப்பொழுது போலீசார் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து அவர்கள் மோடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
