திருப்பத்தூரில் மத்திய அரசு கொண்டுவந்த 4 தொகுப்பு சட்டங்களை கண்டித்து கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்க கூட்டமைப்பு தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி அருகே கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்க கூட்டமைப்பு தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பாக மத்திய அரசு கொண்டு வந்த நான்கு தொகுப்பு சட்டங்களை கண்டித்து மாநில பொதுச் செயலாளர் நாகேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏற்கனவே இருந்த 44 சட்டங்களை சுருக்கி அதன் பிறகு 29 சட்டங்களாக மாற்றி தற்போது அதையும் நான்கு சட்ட தொகுப்புகளாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்ததால் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். முன்மாதிரியாகவும் சிறப்பாகவும் செயல்படக்கூடிய கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் உள்ளிட்ட பல்வேறு வாரியங்கள் கலைக்கக்கூடிய பேராபத்து உள்ளது இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு பேராபத்துக்கள் உள்ளதால் தொழிலாளர்களுக்கு எதிராகவும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் உள்ள இந்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி கோஷங்கள் எழுப்பி பின்பு கண்டன உரையாற்றப்பட்டது.
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கூட்டமைப்பு செயலாளர் முனிரத்தினம் உள்ளிட்ட கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்க கூட்டமைப்பு தமிழ்நாடு விவசாயிகளின் தொழிலாளர்கள் கட்சி தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்ந்த மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

















