மசூதிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அபேஸ்! முத்தவல்லிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது மீண்டும் ஆதாரங்களுடன் புகார்!!
திருப்பத்தூர், ஆக.20-திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரை சேர்ந்தவர் வாஜித் (43) சமூக ஆர்வலர். இவர் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மசூதிக்கு சொந்தமான சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேலான சொத்துக்களை காலங்காலமாக இருந்த முத்தவல்லிகள் தங்களுடைய உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு விற்பனை செய்து விட்டதாக ஆதாரத்துடன் கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
அதேபோல தமிழ்நாடு வஃக்பு வாரியத்திற்கும் புகார் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் திருப்பத்தூர் நகர கோட்டை மசூதியில் முத்தவல்லிகளை தேர்ந்தெடுக்க ரகசிய கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்ததை அறிந்த சமூக ஆர்வலர் வாஜித் ஆதரவாளர்கள் இதனை தடுத்து நிறுத்தினர்.
இதன் காரணமாக பழைய முத்தவல்லிகளின் ஆதரவாளர்கள் திலாவர் மற்றும் நயாஸ் அகமத் ஆகிய இருவரும் வாஜித்தின் ஆதரவர்களை கொலை மிரட்டல் விடுப்பதன் காரணமாக, திரும்பவும் சமூக ஆர்வலர் வாஜித் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டுமென புகார் அளித்தார்.
