தமிழ்நாடு அரசின் பொது நூலக இயக்ககம், கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் இரண்டு பிரம்மாண்ட சிறப்பு நூலகங்களுக்குத் தேவையான நூல்களைக் கொள்முதல் செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளது. கோயம்புத்தூர்: பெரியார் அறிவுலகம் திருச்சிராப்பள்ளி: காமராசர் அறிவுலகம் இந்த இரண்டு நூலகங்களும் உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்புடன், பல்வேறு பாடப்பிரிவுகளின் கீழ் லட்சக்கணக்கான நூல்களைக் கொண்டு அமையவுள்ளன.
தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் உள்ள கீழ்க்கண்ட பாடப்பிரிவுகளின் கீழ் சிறந்த நூல்கள் மற்றும் மின்னூல்கள் (e-books) கொள்முதல் செய்யப்பட உள்ளன: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மருத்துவம் மற்றும் பொறியியல் கணினி அறிவியல் வரலாறு மற்றும் புகழ்பெற்ற இலக்கிய நூல்கள் புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இக்கொள்முதலில் பங்கேற்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம்: www.annacentenarylibrary.org இணையதளத்தில் ”புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கான நூல் கொள்முதல்” என்ற தலைப்பின் கீழ் உள்ள Google Form-ஐ நிரப்ப வேண்டும்.
விவரங்களை Unicode எழுத்துருவில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும். 26.12.2025 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் குறிப்பிட்ட நூல்களுக்கான ஒரு மாதிரி படியினை (Sample Copy) 29.12.2025 முதல் 05.01.2026 வரை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அண்ணா நூற்றாண்டு நூலக இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது 044- 2220 1177 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் எனப் பொது நூலக இயக்குநர் அறிவித்துள்ளார்.
