மூன்றாம் வகுப்பு மாணவியை சரமாரியாக தாக்கிய தனியார் பள்ளி ஆசிரியை..!

பெல்ட் போடாமல் பள்ளிக்கு வந்த மூன்றாம் வகுப்பு மாணவியை சரமாரியாக தாக்கிய தனியார் பள்ளி ஆசிரியை.. முதுகு பக்கம் முழுவதுமே வீக்கத்துடன் காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஜீவா செட்டு பகுதியில் செயல்பட்டு வரும் கோல்டன் நர்சரி பிரைமரி ஸ்கூல் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவிகள் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளிபாளையம் பகுதியை சார்ந்த பிரகாஷ் என்பவரின் மகள் இப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்றைய தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவி இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்தார்.இன்று காலை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் குழந்தையை குளிக்க வைக்கும் போது முதுகு முழுவதும் பச்சை நிறத்தில் சிவந்திருந்தது தொடர்ந்து ஆங்காங்கே வீக்கங்கள் இருந்த நிலையில் குழந்தையிடம் விசாரித்த பொழுது என்னை எனது வகுப்பு ஆசிரியை பெல்ட் ஏன் அணியவில்லை எனக் கூறி அடித்தார் எனக் கூறியதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள்….

இன்று பள்ளி திறந்தவுடன் பள்ளிக்கு வந்த குழந்தையின் பெற்றோர்கள் ஆசிரியர் அடித்ததை தொடர்ந்து கல்வி நிர்வாகத்துடன் சரமாரியாக கேள்வி எழுப்பினர், பள்ளி நிர்வாகம் எந்த ஒரு பதிலும் அளிக்காததால் விரக்தி அடைந்த பள்ளியில் படிக்கும் சக மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர் தொடர்ந்து நாமக்கல் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த பள்ளிபாளையம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர்களை சமாதானப்படுத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

Exit mobile version