திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியிலுள்ள பண்ணைக்காடு கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கும்பரைச் சேர்ந்த பிரியா என்ற மாணவி கல்வி பயின்று வந்தார்.
நேற்று போலவே மதிய வேளையில் பள்ளி வளாகத்தில் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட பின்னர், மாணவி திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதைக் கண்ட பள்ளி ஆசிரியர்களும் நிர்வாகமும் அவசரமாக நடவடிக்கை எடுத்து, பண்ணைக்காடு அரசு மருத்துவமனைக்கு மாணவியை அழைத்துச் சென்றனர்.
ஆனால், வழியிலேயே மாணவி உயிரிழந்துவிட்டதாக அங்கு பணியாற்றும் தலைமை மருத்துவர் உறுதிப்படுத்தினார்.
மாணவியின் மரணம் குறித்து மேலதிக தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில், உடற்கூறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், பண்ணைக்காடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் மரணம், பள்ளி மாணவர்களும் பெற்றோர்களிடையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
















