பிரித்திங்கர தேவி திருக்கோயில்

ஸ்ரீ வரசித்தி விநாயகர் பாதாள மகா பிரித்திங்கர தேவி திருக்கோயில் பருத்திப்பட்டு கிராமம் ஸ்ரீராம் நகரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் அமாவாசை, பௌர்ணமி விஷேச நாட்களில் தேவியின் உக்கிரம் அதிகமாக இருப்பதால் மகா யாகங்கள் நடைபெறும்.

இத்திருக்கோயிலின் சிறப்பு சரபேஷ்வரர், காலபைரவர், ஸ்ரீவராகிஅம்;மன், தட்ஷணமூர்த்தி விநாயகர், மஹாவிஷ்ணு, பக்த ஆஞ்சநேயர், துர்கை, வள்ளிதெய்வயானையுடன் முருகன். நுவகிரகங்கள் தனிதனி சன்னதிகள் உள்ளன.

இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்த நரசிம்மர் அவனுடைய ரத்தத்தை பருகியதால் கடுமையான உக்கிரம் கொண்டார். நரசிம்மரின் உக்கிரத்தை குறைத்து சாந்தமடைய செய்ய சிவபெருமானின் அம்சமான சரபரிடம் இருந்து தோன்றியவர் தான் பிரத்யங்கிரா தேவி என்று புராண கதைகள் கூறுகின்றனர்.

நவசக்திகள் என்று சொல்லக்கூடிய பூமி சக்தி, ஜல சக்தி, அக்னி சக்தி, காற்று அல்லது உயிர் சக்தி, பிரபஞ்ச சக்தி, அமிர்த சக்தி, சூரிய சக்தி, பாவ புண்ணியங்களை தீர்மானிக்கும் சக்தி, மோட்சம் அருளும் சக்தி ஆகிய சக்திகளின் ரூபமாக பிரத்யங்கிரா தேவி. விளங்குகிறார் புராண காலத்தில் நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவை வதம் செய் பின்பும் தனது உக்கிரம் அடங்காமல் இருந்தார் நரசிம்மராக இருந்த மகாவிஷ்ணு.

இதனால் பயந்த தேவர்கள் சிவ பெருமானிடம் சென்று முறையிட, அவர் சரபேஸ்வரர் என்ற மிகப்பெரும் பறவை வடிவெடுத்து, நரசிம்மரின் கோபக்கனல் இந்த உலகை அழிக்காமல் பாதுகாத்தார். அப்போது நரசிம்மரிடம் இருந்து தோன்றிய கண்டபேருண்ட என்ற இரு தலை பறவைக்கும், சரபேஸ்வரருக்கும் பயங்கர சண்டை மூண்டது. இதனால் உலகமே அழியும் நிலை ஏற்பட்டது.

அப்போது இந்த உலகை அழிவிலிருந்து காக்க சிவபெருமானின் மனைவியாகிய ஆதிபராசக்தி, தனது அம்சமாக ஆண் சிங்கத்தின் தலையும், பெண் மனித உடலும் கொண்ட பிரத்யங்கரா தேவி என்ற சக்தி வாய்ந்த பெண் தெய்வத்தை உருவாக்கி அனுப்பினாள். சரபேஸ்வரர், கண்டபேருண்டம் இடையேயான சண்டையை நிறுத்த பிரத்யங்கரா தேவி எழுப்பிய கர்ஜனை அண்ட சராசரங்களையும் அதிர வைத்து, அந்த சண்டையையும் நிறுத்தியது.

இத்தகைய சக்தி வாய்ந்த பிரத்யங்கரா தேவியை நாம் வணங்குவதால், நமக்கு தீமை செய்யும் சக்திகளிடமிருந்து அந்த தேவி காப்பாள் என்பது ஐதீகம்.
இவர் சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவர் என கருதப்படுகிறார். ( இதுகுறித்து கோவிலின் அர்ச்சகர் கூறுகையில் )
ஆவணிச் செவ்வாயில், பிரத்தியங்கிரா தேவியை மனதார வழிபடுங்கள்.

தீயசக்திகளில் இருந்தும் துஷ்டர்களிடம் இருந்தும் நம்மைக் காத்தருள்வாள் தேவி. உக்கிர தேவியரில் மிக முக்கியமானவள் பிரத்தியங்கிரா தேவி.
பிரத்தியங்கிராவும் சூலினியும். இவர்கள் இருவரும் சரபரின் மனைவியர். இருவரும் சரபருக்கு இரு இறக்கைகளாக விளங்குகின்றனர். பிரத்தியங்கிரா என்பது பத்ரகாளியேதான். சரப மூர்த்தி நரஸிம்மத்தை அடக்க உதவ வந்த சக்தி இவளே. பயங்கரமானத் தோற்றத்தின் காரணமாக உக்ரா என்று அழைக்கப்படுகிறாள்.

நரசிம்மர் சாந்தமானார். தான் சிவபெருமானுடன் சண்டையிட்டதை எண்ணி வருந்தி, சிவனை 18 ஸ்லோகங்களால் துதித்தார். இந்த 18 ஸ்லோகங்களே சரபேஸ்வரரின் அஷ்டோத்திர நாமாக்கள். இந்த அம்பிகையின் மந்திரத்தைக் கண்டுபிடித்தவர்கள் அங்கிரஸ், பிரத்யங்கிரஸ் என்ற ரிஷிகள். இத்தேவியின் நாமமே அந்த இரு ரிஷிகளின் பெயர்களிலும் உள்ளன. அழிக்க சிவபெருமான் அனுப்பிய வீரபத்திரருக்கு துணையாக இருந்து உதவியவள் பிரத்யங்கிராதான்.

குரோதத்திலிருந்து உதித்தவளாதலால் இவளுக்கு குரோத சம்பவாயா என ஒரு திருநாமமும் உண்டு. ஒழிக்க இவள் உதித்ததால் உலகிற்கே மங்கலம்
ஏற்பட்டது. இவளை உபாசித்து இவள் அருளைப் பெற்றுவிட்டால் அந்த ராம லக்ஷ்மணர் கூட தன்னை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த இந்திரஜித், நிகும்பலை என்ற இடத்தில் மிக ரகசியமாக யாகம் செய்தான்.

தன்னை உபாசிப்பவன் நல்லவனா கெட்டவனா என்பதை கவனிக்கக் கூடியவள் அல்ல இவள். பிரத்யங்கிராவின் அருள் இந்திரஜித்திற்கு கிடைத்து விட்டால் அவனை யாரும் வெல்ல முடியாது என்பதை ஜாம்பவான் மூலம் அறிந்த ஆஞ்சநேயர் அந்த யாகத்தை முதலில் அழித்துவிட்டுதான் மறுவேலை பார்த்தார். இவளை உபாசிப்பவர்கள் கடன், சத்ரு தொல்லைகளிலிருந்து மீள்வர்.

16 செல்வங்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ்வர். பில்லி, சூனியம், ஏவல், செய்வினைகள் போன்ற அனைத்து தீயவினைகளையும் தீர்ப்பவள் பிரத்யங்கிரா தேவி. இவள் பத்ரகாளியின் அம்சம். தேவி சிங்க முகத்துடனும் கரிய உடலுடனும் சிறிய கண்களுடனும் கைகளில் சூலம், கபாலம், டமருகம், பாசம் போன்ற ஆயுதங்கள் ஏந்தியும் நீல நிற ஆடை உடுத்தி, தனது வலது காலை தொங்கவிட்டு, இடது காலை மடித்து சிங்கத்தின் மீது சிம்மவாகினியாய் வீற்றிருந்து திருவருள் பாலிக்கின்றாள்.

அகோர ரூபம் என்றாலும் தேவி இங்கு சர்வமங்களங்களையும் அருளும் குணம் கொண்டவள். பயம் நீக்குபவள். எந்தவித பயம் ஏற்பட்டாலும் இத்தேவியின் நாமத்தை சொல்ல அந்த பயங்கள் தீர துணையிருப்பவள். கேட்டவர்க்கு கேட்டதை அருளும் இவள் பக்தருக்கு உறுதுணையாய் கூடவே இருப்பவள்.

முற்பிறவி வினைகள், தீராத நோய்கள், குழப்பங்கள், கஷ்டங்கள் தீர்க்கும் பிரத்யங்கிராதேவி பிரத்யங்கரஸ், பால பிரத்யங்கிரா, பிராம்மி பிரத்யங்கிரா, ருத்திர பிரத்யங்கிரா, உக்கிர பிரத்யங்கிரா, அதர்வண பிரத்யங்கிரா, சிம்ம முகக் காளி, மும்முக ப்ரத்யங்கிரா, ஸ்ரீ மகா பிரத்யங்கிரா என ஒன்பது விதமாக வழிபடப்படுகிறாள்.
கலியுகக் கடவுளான இவளை உபாசிப்பவர்கள் கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்குவர்.

இவளை பூஜிப்பவரை, தம்மை பூஜிப்பவர்களாகவே தேவர்கள் எண்ணி அருள்பாலிப்பர். தேவியை பூஜிப்பவர் பிரம்மன், விஷ்ணு, சிவன், கௌரி, லட்சுமி, விநாயகர் அனைவரையும் பூஜித்த பலன்களை பெறுவர். உக்கிர தெய்வமாக காணப்பட்டாலும் இவளது திருவுருவத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.

அமாவாசை, பௌர்ணமி தினங்களில் நடைபெறும் யாகத்தில் கலந்து கொள்வதும் இவளுக்கு மிகவும் பிரீதியான மிளகாயுடன் தரிசனம் செய்வதும் மிகச் சிறந்த பலன்களை தரும். உக்கிர தேவியான இவளுக்கு மிளகாய், மிளகு போன்ற காரமான பொருட்கள் மிகவும் ஏற்றவை. பிரத்யங்கிரா தேவி பயத்தை போக்குபவள். எந்தக் காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமாவைச் சொன்னாலே நிவாரணம் கிடைத்து விடும்.

Exit mobile version