September 11, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அகமதாபாத்தில் பயங்கர விமான விபத்து : பிரதமர் மோடி நேரில் பார்வை

by Priscilla
June 13, 2025
in News
A A
0
அகமதாபாத்தில் பயங்கர விமான விபத்து : பிரதமர் மோடி நேரில் பார்வை
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

அகமதாபாத் :
லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், அகமதாபாத்தில் பயங்கர விபத்திற்குள்ளானது. இதில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, இன்று அகமதாபாத்திற்கு சென்று, விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டனின் கேட்விக் விமான நிலையத்தை நோக்கி இன்று மதியம் 1.38 மணிக்கு புறப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட 230 பயணிகள், விமானி சுமித் சபர்வால், துணை விமானி கிளைவ் குந்தர் மற்றும் 10 பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் இருந்தனர்.

விமானி சுமித் சபர்வால் 8200 மணி நேரம் விமானம் இயக்கிய அனுபவமுடையவரும், துணை விமானி கிளைவ் குந்தர் 1100 மணி நேர அனுபவமுடையவரும் ஆவார். பயணிகள் அனைவரும் இந்தியர்கள், பிரிட்டனர்கள், போர்ச்சுகீசியர்கள், கனடாவை சேர்ந்தவர்கள் எனும் பன்னாட்டுப் பின்னணியிலிருந்தனர்.

விமானம் புறப்பட்ட சில நொடிகளில் மேலே எழுவதில் சிக்கல் ஏற்பட்டு, 425 அடி உயரம் எட்டியதும் சிக்னல் அறுந்துவிட்டது. பின்னர் 625 அடி உயரத்திலிருந்து, மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தின் மீது தலைகீழாக விழுந்து வெடித்துச் சிதறியது.

அதிகாரப்பூர்வமாக ஏர் இந்தியா தெரிவித்த தகவலின்படி, விபத்தில் ஒரே ஒரு பயணி விஷ்வாஸ் குமார் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து நடந்த இடத்திற்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். இந்த பயங்கரச் சம்பவத்தில் காயமடைந்த ஒரே நபரையும் பிரதமர் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஏற்கனவே அகமதாபாத்தில் உள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார். அவர் கூறியதாவது :

“அகமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, வருத்தப்படுத்தியுள்ளது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மனம் நொறுகியது. இந்த சோகமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியே எனது எண்ணங்கள் உள்ளன. அவர்களுக்கு உதவுவதற்காக அமைச்சர்களுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருக்கிறேன்.”

இந்த விபத்து நாட்டை முழுவதுமாக அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விமான பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் ஒரு முறை கேள்விகள் எழுந்துள்ளன.

Tags: Ahmedabadair indiapassengersplane crashPM MODI
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இன்றைய முக்கிய செய்திகள் 13-06-2025

Next Post

“காமராஜர், இளைய காமராஜர் என்று சொல்லாதீர்கள்” – விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் வேண்டுகோள்

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
துலாம் – திடீர் ஆசையால் ஏற்படப்போகும் அதிர்ச்சி | Thulam | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam

September 17, 2025
பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ரெட்போர்ட் காலமானார் !

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ரெட்போர்ட் காலமானார் !

September 17, 2025
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.