வத்தலகுண்டுவில் ‘உள்ளம் தேடி  இல்லம் நாடி’ நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த்

வத்தலகுண்டு காளியம்மன் கோவில் அருகே தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) சார்பில் ‘உள்ளம் தேடி  இல்லம் நாடி’ எனும் சிறப்பு மக்கள் தொடர்பு நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முத்துக்காளை தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் கருத்த பாண்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிமுருகன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ஆர் பழனி நிலக்கோட்டை தொகுதி பொறுப்பாளர் மற்றும் மாவட்ட பொருளாளர் மாசாணம் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய தேமுதிக கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதை ஆண்டவனும் கேப்டனும் (விஜயகாந்த்) தீர்மானிப்பார்கள். இதற்கான முக்கியமான தீர்மானங்கள் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் எடுக்கப்படும்; அதில் அதிக அளவில் கலந்துகொள்ள வேண்டும்” எனக் கூறினார். அத்துடன், “சபரிமலைக்கு தினமும் லட்சக்கணக்கானோர் திண்டுக்கல் வழியாக பயணம் செய்கிறார்கள். வத்தலகுண்டு அரசு மருத்துவமனையை உடனடியாக மேம்படுத்த வேண்டும்; இது மக்கள் பாதுகாப்புக்காக அவசியம்” என மதிப்புமிகு கோரிக்கையையும் முன்வைத்தார். மேலும், “தீவிர சிறப்பு வாக்காளர் திருத்த முகாம்களில் வாக்குச்சீட்டு பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். கேப்டனின் குருபூஜை நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் மேலும் பல முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்: கழகத் தேர்தலுக்கான பணிக்குழு செயலாளர் & மண்டல துணை அமைப்பாளர் அழகர்சாமி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தொகுதி பொறுப்பாளர், இளைஞர் அணி துணை செயலாளர் பார்த்திபன் மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் பாக்கியசெல்வராஜ் மாநில தொழிற்சங்க துணைத் தலைவர் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜெர்மன் ராஜ், நித்யா, முருகேந்திரன், கணேசன் மேற்கு, கிழக்கு ஒன்றியங்களின் அவைத்தலைவர்கள், பொருளாளர்கள், துணைச் செயலாளர்கள் பல பேரூராட்சி, ஊராட்சி, ஒன்றிய கழக நிர்வாகிகள் பெரும் எண்ணிக்கையில் மாவட்ட பிரதிநிதர்கள் மற்றும் நகர பொறுப்பாளர்கள் நிகழ்ச்சி முடிவில் நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் டிங்க்டாங் வெள்ளைச்சாமி நன்றியுரை வழங்கினார்.  நிகழ்ச்சியின் தொடக்கத்தில், விஜயகாந்த் உருவம் பொறித்த ரதத்தில் ஊர்வலம் நடத்தப்பட்டு மக்கள் உற்சாகம் பெருகியது. கேப்டன் கலைக்குழு ஏற்பாடு செய்த கலைநிகழ்ச்சிகள் நிகழ்ச்சிக்கு மேலும் மேலொளி சேர்த்தன.  வத்தலகுண்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேமுதிக நிர்வாகிகளை வரவேற்று உற்சாகமாக பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஜெர்மன் ராஜா,  நித்யா முருகேந்திரன், கணேசன் மற்றும் மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் அவைத்தலைவர் மணிகண்டன், பொருளாளர் வடிவேல், ஒன்றிய கழகத் துணைச் செயலாளர்கள் செல்லப்பாண்டி, சுப்பிரமணி, அழகுராஜா கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் அவை தலைவர் ராஜேஷ், பொருளாளர் ஆரோக்யசாமி, துணைச் செயலாளர்கள் கண்ணன், குணசேகரன், பிரபு, இந்திரா மற்றும் வத்தலகுண்டு பேரூர் கழக நிர்வாகிகள் அவைத் தலைவர் ரத்தினவேல், பொருளாளர் சீனிவாசன், கழகத் துணைச் செயலாளர் இர்பான், மொக்கை ராஜ், ராஜேஸ்வரி  செம்பட்டி நகரம், நிலக்கோட்டை தெறகு, கிழக்கு, ரெட்டியார்சத்திரம் வடக்கு, நிலக்கோட்டை பேரூர், அம்மையநாயக்கனூர் பேரூர், சின்னாளப்பட்டி பேரூர், ஸ்ரீராம் பேரூர் மற்றும் கன்னிவாடி பேரூர், சித்தையன் கோட்டை பேரூராட்சி அய்யம்பாளையம் பேரூராட்சி வத்தலகுண்டு ஊராட்சி செயலாளர்கள் நகர பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Exit mobile version