மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட தலைவர் மாரிமுத்து ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அச்சங்கத்தினர், தைப்பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசு வழங்கிடும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஒரு மண் பானையும், மண் அடுப்பும் வழங்க வேண்டும். மழைக்கால பராமரிப்பு உதவித்தொகை ரூ.5,000 என உள்ளதை ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்கள் நல வாரியத்தில் இந்நாள் வரை பதிவு செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்கள் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் மண்பாண்ட கலை அழிந்து விடாமல் பாதுகாக்க பள்ளி புத்தகத்தில் தனி பாட பிரிவை அளிக்க வேண்டும், மாவட்டம்தோறும் தொழிற்கூடம் அமைத்து மண் பொம்மை மற்றும் மண்பாண்ட கலைகள் பற்றி பயிற்சி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்

















