திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டி பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார்

திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டிகளை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார்.

சமத்துவம் பொங்கட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் திராவிட பொங்கல் 2026 சமூக நீதிக்காண திருவிழாவாக கொண்டாடப்பட வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு க ஸ்டாலின் அறிவுறுத்திருந்தார். அதன்படி திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் திராவிட பொங்கல் சமூகநீதிக்கான திருவிழா கொண்டாட்டம் திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக ஒன்றிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்று தற்போது திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இதனை இன்று திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளர்பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார். கபடி, வாலிபால், கோகோ, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். நாளை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் வெற்றி பெரும் மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version