திருவாரூரில் சுமார் எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய கட்டிடங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட குளம் பூங்காக்களை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி .கலைவாணன் திறந்து வைத்தார்.
திருவாரூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட கடைவீதியில் மீன் மற்றும் இறைச்சி சந்தை சுமார் ஐந்து கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் திறந்து வைத்தார்.
அப்போது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதனை அடுத்து இடையர்குளம் 37 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதையுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட குளத்தை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
இதேபோன்று நூலகம் விளையாட்டு பூங்காக்கள் உள்ளிட்ட சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு கட்டுமான பணிகளை சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் நகர மன்ற துணைத் தலைவர் அகிலா , திமுக நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்














