திருவாடுதுறை -மயிலாடுதுறை இடையே புதிய மகளிர் விடியல் பேருந்தின் சேவையை பூம்புகார் எம்எல்எ தொடக்கி வைத்து தானே பேருந்தை இயக்கி ஓட்டிச் சென்று உற்சாகம்:-
மயிலாடுதுறை மாவட்டம் திருவாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து
மேக்கரிமங்கலம் குத்தாலம் வழியாக மயிலாடுதுறைக்கு 10 A என் கொண்ட புதிய மகளிர் விடியல் பேருந்து சேவை தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு, பேருந்து சேவையை ரிப்பன் வெட்டி, கொடியசைத்து தொடக்கி வைத்தார். தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தானே ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை உற்சாகத்துடன் ஓட்டி சென்றார். அவருடன் பேருந்தில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பயணித்து ஆராவாரம் செய்தனர். அரசுப் பேருந்தை எம்எல்ஏ இயக்கிச் செல்வதை பொதுமக்கள் பலரும் கண்டு ஆச்சரியத்துடன் கடந்து சென்றனர்.
















