ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு… முதல்வர் தொடக்கம் !

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆலந்தூரில் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு நீள கரும்பு அடங்கும். இதனுடன், பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில், குடும்பத்துக்கு ரூ.3000 ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் முன்பே அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 22 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன்கள் நியாய விலைக் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் வரும் 13ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமைகளிலும் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு, பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இதனுடன், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version