மயிலாடுதுறை வாக்கு எண்ணிக்கை மையத்தில் அரசியல் கட்சி முகவர்கள் பலத்த பாதுகாப்பு பிறகு உள்ளே அனுமதி

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அரசியல் கட்சி முகவர்கள் பலத்த பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர் :-

நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் மன்னன்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் மூன்றெழுத்து பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. மயிலாடுதுறை சீர்காழி பூம்புகார் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது இதனை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அடையாள அட்டைபெற்றுள்ள அரசியல் கட்சி முகவர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து உங்களை சென்று வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை மையத்தின் வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறையினர் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் உள்ளே அனுமதிக்க படாத நிலையில், தனி கவுண்டர்கள் மூலம் இதனை காவல்துறையினர் பெற்று பாதுகாத்து வருகின்றனர்.

Exit mobile version