கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக – மதுரை மாநாட்டில் விஜய் மீண்டும் திட்டவட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கியது.

மாநாடு தொடங்கிய நிலையில், விஜய் பாடல்களின் தொகுப்பு ஒலிப்பரப்பட்டது. இதனைத்தொடர்ந்து உங்கள் விஜய், உங்கள் விஜய் உயிரென வரேன் நா என்று தொடங்கும் விஜய் தனது சொந்த குரலில் பாடிய பாடல் ஒலிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். அவருக்கு கட்சியினர் மற்றும் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுத்தனர் .

இதனையடுத்து மக்களிடம் உரையாற்றிய விஜய், “1967 இல் 1977 இல் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் அதிகார மாற்றம் ஏற்பட்டது. அதே போல 2026 இல் வரலாறு திரும்ப போகிறது என்பதற்கு தான் இந்த மாநாடு.

நம்முடைய ஒரே கொள்கை எதிரி பாஜக நம்முடைய ஒரே அரசியல் எதிரி திமுக” என்று தெரிவித்தார்

Exit mobile version