காவலர் தினத்தில் குழந்தைகளாக மாறிய காவலர்கள். காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கவும் சிறுவயதை நினைவு கூறும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது.
கடந்த 1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் காவல் சட்டம் இயற்றப்பட்ட தினமான செப்டம்பர் 6 ஐ நினைவு கூறும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 6ஆம் தினத்தை காவலர் தினமாக அனுசரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் அடிப்படையில் காவலர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து நிலை காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்ட “மகிழ்ச்சி” இன்னும் தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மயிலாடுதுறை மண்ணமந்தலில் ஏவிசி பொறியியல் கல்லூரியில் இன்று காவலர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் “காவலர் நாள் உறுதிமொழி” ஏற்றுக்கொண்டனர். பின்பு காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் விதமாகவும், உற்சாகமுட்டும் விதமாகவும் பாடல் பாடுதல், நடனமாடுதல், காவலர் கவிதை வாசித்தல் போன்ற கலை நிகழ்ச்சிகளும், இசை நாற்காலி, கயிறு இழுத்தல், பலூன் உடைத்தல், டீ கப் பயன்படுத்தி கட்டுமானம் செய்தல் போன்ற சிறு சிறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறையின் சிறப்பு, காவலர்களின் கடமைகள் மற்றும் காவலர் பொதுமக்கள் நல்லுறவு குறித்து சிறப்புரை சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி, மற்றும் அனைத்து நிலை காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 120 பேர் கலந்து கொண்டனர். மேலும் செப்டம்பர் 6ஆம் நாளை காவலர் தினமாக அனுசரிக்கவும், இந்நிகழ்ச்சியை ஏற்படுத்தி தந்தமைக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் நன்றி தெரிவித்தனர்.
