திருவாரூர் மாவட்ட திமுக இலக்கிய அணியின் சார்பில் கொரடாச்சேரி தனியார் திருமண மண்டபத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கவிதை எழுதும் போட்டி திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி .கலைவாணன் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக கரூரில் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
இந்த போட்டியில் பேரறிஞர் அண்ணா ,முத்தமிழ் அறிஞர் கலைஞர் பற்றிய திறனாய்வு கவிதைகள் எழுதம் போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் இந்த போட்டி நடத்துவதன் அவசியம் என்னவென்றால் மாணவ மாணவிகளான நீங்கள் கடந்த காலங்களில் பிற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் யாரும் கல்வி கற்க முடியாத நிலை இருந்தது. அதற்கு கட்டணம் செலுத்தி கல்வி கற்கும் வாய்ப்பை பெற்று தந்தது திராவிடர் இயக்கம் ,அதேபோன்று வேலைவாய்ப்பில் அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு பெற்று தந்தது திராவிடர் இயக்கம் இதனைப் பற்றி மாணவ மாணவிகள் அறியவே இத்தகைய போட்டிகள் நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.
இந்த போட்டியில் ஜி.ஆர்.எம் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீப்ரியா ,விளக்குடி அரசு பள்ளி மாணவி கனிமொழி, திருத்துறைப்பூண்டி அந்தோணியர் பள்ளி மாணவி ப்ரியாதர்ஷினி உள்ளிட்டோர் முதல் மூன்று இடங்களையும் கல்லூரி மாணவ மாணவிகளில் சுவாமி தாயனந்தா கல்லூரி மாணவர் ஹாரிஸ் ஜெயராஜ், மத்திய பல்கலை கழக மாணவர் ரோஹித், திருத்துறைப்பூண்டி அரசுகல்லூரி மாணவி பிரியதர்ஷினி முதல் மூன்று இடங்களையும் பிடித்தனர்.
மாவட்ட அளவிலான இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவர் . மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கொரடாச்சேரி ஒன்றிய கழக செயலாளர்கள் பாலச்சந்திரன், சேகர் என்கிற கலியபெருமாள், நன்னிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் கேப்டன் செல்வராஜ், பேரூர் செயலாளர் கலைவேந்தன் மற்றும் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் புலவர் மணி, துணை அமைப்பாளர்கள் ஜாகிர் உசேன் , பாலமுத்து மாணவ, மாணவியர்கள் ,பெற்றோர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர் .
