பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இருவரும் விரைவில் இணைவார்கள் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் பேட்டி ….
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மேட்டூர் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறுகையில் ;
சின்னையா ஐயா தொடர்ந்து தொலைக்காட்சி நண்பர்கள்
கேள்வி கேட்கிறீர்கள். ஐயா சின்னையா இருவரும் ஒரே குடும்பம் அவர்களுக்கு என்னை போன்ற ஒரு சாதாரண சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து சொல்வதற்கு
அழகல்ல தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய கட்சி ஐயா நிறுவனர் உலகத் தலைவர் பாரதப் பிரதமரால் பாராற்று பெற்றவர் அவருக்கு கருத்து சொல்லி பதில் சொல்வது சரியாக இருக்காது.
அடுத்து சின்னையா அவர்களும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து உலக நாடு சரித்திரம் படைத்து சுகாதாரத் துறையில் மிகப்பெரிய சாதனை செய்துள்ளார் மிகப்பெரிய அறிவாளி அவர் குறித்தும்
உங்களுடைய கேள்விபதில் என்னிடம் உள்ளது சட்டமன்ற உறுப்பினராக
அவர்கள் இருவரும் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளையும் பதில் சொல்வது ஆரோக்கியமான நிகழ்வு இல்லை. விரைவில் இணைவார்கள் நல்ல காலம் வருகிறது.
இது ஒரு நீர்க்குமிழி மாதிரி கட்டாயம் நல்ல முடிவு வரும் நீங்களும் எங்களுக்கு ஆதரவாக எழுதுங்கள். பாட்டாளி மக்கள் கட்சி முன்னேறாமல் வன்னியர் சங்கம் முன்னேறாமல் தமிழ்நாடு முன்னேறாது நீங்களும் முழு ஒத்துழைப்பு கொடுங்கள் என்றார்.