பிரதமர் நரேந்திர மோடி நாளை மணிப்பூர் மாநிலத்தை பார்வையிட உள்ளார். அப்போது அவர் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்குவார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர், இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டது. தற்போது நிலைமை அமைதியாக திரும்பி வருகிறது. சில இடங்களில் இதுவரை அசம்பாவித நிலை நிலவினாலும், அரசாங்கம் ஜனாதிபதி ஆட்சி மூலம் நிலைமை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி வரவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், அவரின் பயணத்தை உறுதிப்படுத்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிப்பூர் பயணத்தின் போது பிரதமர், காலை 10:30 மணிக்கு சுரசந்த்பூர் சென்றுவிடுவார். இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடுவார். இதோடு சில முக்கியமான வளர்ச்சி திட்டங்களையும் தொடங்கி வைக்க திட்டமிட்டுள்ளார்.
மணிப்பூர் தலைமைச் செயலாளர் தெரிவித்ததாவது, “பிரதமர் மோடியின் இந்த பயணம் மாநிலத்தில் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு வழிகாட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் கருத்து :
இந்தச் செய்தியை தொடர்புபடுத்தி காங்கிரஸ் எம்பி ராகுல் தெரிவித்ததாவது, “மணிப்பூர் பிரச்சனை நீண்டகாலமாகத் தொடர்கிறது. தற்போதைக்கு பிரதமர் அங்கு செல்வது நல்ல விஷயம். ஆனால், நாட்டில் தற்போது மிக முக்கியமான விஷயம் ஓட்டுத் திருட்டு. ஹரியானா மற்றும் மஹாராஷ்டிராவில் மக்களின் வாக்குகள் திருடப்பட்டுள்ளன” என்று கூறினார்.