சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 215 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் பூ.நரேஷ் பங்கேற்று மாணவர்களுடன் உறுதிமொழி ஏற்றார்.இந் நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் சீர்காழி ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் குருஞானசம்பந்தர் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

















