மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் போதைப்பொருள், கள்ளச்சாராயம் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகளை குறித்த விழிப்புணர்வு பேரணியை சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் மயிலாடுதுறை கலால் உதவி ஆணையர் மாணிக்கராஜ் கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள் இடையே உறுதிமொழி மற்றும் போதைப்பொருள் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசாரங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பேரணி நடைபெற்றது. இதில் போதைப் பொருட்கள் கள்ளச்சாராயம் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்,உடல்நலம் முழுமையாக பாதித்து உயிரிழப்பு ஏற்படும், நினைவாற்றல் குறையும், சாலை விபத்துகளும் ஏற்படும் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இதில் பெஸ்ட் மெட்ரிக் பள்ளி குழும தலைவர் ராஜ்கமல், வட்டாட்சியர் அருள்ஜோதி, கலால் துறை வட்டாட்சியர் விஜயராணி, மதுவிலக்கு காவல் ஆய்வாளர் விஜயா, சீர்காழி காவல் ஆய்வாளர் கமல்ராஜ், பெஸ்ட் மெட்ரிக் பள்ளி முதல்வர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
















