மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உப்பனாற்றங்கரையில் மாநில மரமான பனை மரங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வாகவும், நீர்நிலை கரைகளை பலப்படுத்தும் வகையிலும்,பசுமை சேவை சார்பில் ஒரு லட்சம் பனை விதை நடவு பணி தொடக்க விழா நடைபெற்றது. பசுமை சேவை சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் முன்னாள் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் மற்றும் வனத்துறையினர், பசுமை சேவை அமைப்பினர், நகர்மன்ற உறுப்பினர்கள், பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் ஒன்று திரண்டு உப்பனாற்று கரையோரம் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு இருபுறமும் பனை விதைகளை நடவு செய்தனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பனை விதைகளை நடவு செய்யவும், பொதுமக்கள் மாணவ மாணவிகள் யார் பனை விதை நடவு செய்ய விரும்பினாலும் இலவசமாக வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.














