சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்…”
மறுபரிசீலனை செய்ய அரசுக்கு கோரிக்கை..
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ளது விஷ்ணுபுரம் கிராமம். இந்த கிராமத்தில் சிறு சிறு குழந்தைகள் பயிலக்கூடிய அரசு அங்கன்வாடி அமைந்துள்ள பகுதியில் இருந்து சில மீட்டர் தூரத்தில் பெட்ரோல் பங்க் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பெற்றோர்களும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளார்கள்.
மேலும் இந்த கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் கோவில் மற்றும் நீர்நிலை குளம் முதலானவையும் அமைந்துள்ளன. ஆகவே அரசு அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் நலன் கருதி இந்த பெட்ரோல் பேங்க் கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் எனவும், இந்த இடத்தில் கட்டுவதற்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா , அவ்வாறு அனுமதி பெறப்பட்டிருந்தால் முறைப்படி அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளார்களா.. என்பதை மாவட்ட நிர்வாகம் விசாரிக்க வேண்டும் என்றும் பெற்றோர்களும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளார்கள்..
இது குறித்து திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கேட்ட பொழுது, உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் பொதுப்பணித்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்












