தனியார் நிறுவனமான நயரா பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது
ஈரான் இஸ்ரேல் போரால் வளைகுடா நாடுகளில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனமான நயரா பெட்ரோல் பங்குகளில் டீசல் பெட்ரோல் விலை ஏற்றப்பட்டுள்ளது.
டீசல் மூன்று ரூபாயும்
பெட்ரோல் ஐந்து ரூபாயும்
ஏற்றப்பட்டுள்ளது
இதனால் 102.53 காசுகளுக்கு விற்கப்பட்ட பெட்ரோல் தற்பொழுது 107.53 காசுகளுக்கு விற்கப்பட்டு வருகிறது.
அதேபோல 93.88 காசுகளுக்கு
விற்கப்பட்ட டீசல் தற்பொழுது 96.88 காசுகளுக்கு விற்கப்பட்டு வருகிறது
இந்த விலை உயர்வு இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 7000 நயரா பெட்ரோல் பங்குகளில் விலை உயர்வானது அமலுக்கு வந்துள்ளது.

















