சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு

ஆம்பூர் அருகே சோமலாபுரம் பாலாற்றில் மாட்டு வண்டிகள் மூலமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணை போகும் விஏஓ மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் புகைப்பட சரமுடன் மனு கொடுக்க வந்த விசிக வார்டு கவுன்சிலரால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியின் ஊர் நாட்டாமையாகவும் வேலூர் மண்டல விசிக துணை செயலாளராகவும் இருக்கும் தமிழ்செல்வன் என்பவர் கனிமவளக் கொல்லையில் ஈடுபடும் புகைப்படங்களை சரங்களாக தயாரித்து இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அவர் கூறுகையில் ஆம்பூர் சோமலாபுரம் பாலாற்றங்கரையில் தினந்தோறும் பத்துக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் தனிப்பட்ட நபர்கள் இரவோடு இரவாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் பொது மக்களுக்கு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உப்பு நீர் கூட கிடைக்காமல் விஷம் கலந்த நீர் கிடைக்கும் அளவிற்கு அவலம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய கனிம வளக் கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு அந்தப் பகுதியில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலர் பெருமாள் மற்றும் வட்டாட்சியர் துணை போக்குவதால் எந்தவித பயமும் இன்றி தைரியமாக மாட்டு வண்டிகளில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். கனிம வளத்தை கொள்ளை அடிக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உரிய ஆதாரங்களை புகைப்பட சரமாக சேகரித்து மனு கொடுக்க வந்திருக்கிறேன் மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவிட்டு நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களின் வாழ்வாதாரத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் என்று வேதனையோடு தெரிவித்தார்.

Exit mobile version