விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தைதோப்பு தெருவில் உள்ள ஸ்ரீ பழனி ஆண்டவர் கோவிலை அன்பழகன் மற்றும் சக்திவேல் பூசாரி ஆகியோர் கோயிலை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக கோவில் பராமரிப்பு இல்லாமல் இருந்து வருவதாகவும் இந்த கோவிலில் வசூல் செய்யும் பணத்தினை கோவில் பூசாரி ஆக உள்ள சக்திவேல் மற்றும் அன்பழகன் ஆகியோர் அபகரித்து வருவதாகவும் பழனி ஆண்டவர் கோவில் வரும் உண்டியல் வருமானத்தையும் நகைகளையும் இவர்கள் இருவரின் சுய லாபத்திற்காக பயன்படுத்தி வருவதாகவும் எனவே இந்த பகுதி மக்கள் சார்பில் கோவிலை இவரிடம் இருந்து மீட்டு இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து கோவிலில் சுப நிகழ்ச்சிகள் திருவிழாக்கள் உண்டியல் வருமானங்கள் அனைத்தும் விழா குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து நல்ல முறையில் நடத்தவும் கோவிலை பொது கோவிலாக அறிவிக்கும் படிடும் அந்த பகுதி மக்கள் சார்பில் இன்று விழுப்புரம் இந்து சமய அறநிலை துறை அலுவலகத்தில் இந்து சமய அறநிலைத்துறை ஆணையரிடம் மனுவாக அளித்தனர் இந்தகோவிலை அந்த இரண்டு நபர்களிடமிருந்து மீட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கும் மாறும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இந்த கோயிலை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் கேட்டு இன்று மனு அளித்தனர்.
















