சுமார் 70 ஆண்டுகளுக்கு மேல் நூற்றுக்கணக்கான குடும்பங்களோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

கன்னியாகுமரி மாவட்டம்: சுமார் 70 ஆண்டுகளுக்கு மேல் நூற்றுக்கணக்கான குடும்பங்களோடு வசித்து வந்த நிலங்கள் தற்போது இந்து அறநிலையத்துறை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்துள்ளது- தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக, திருமண செலவுக்காக நிலங்களை விற்கவோ வாங்கவோ முடியாத நிலை உருவாகியுள்ளது- தடையை அகற்ற வேண்டும் என ஊர் பொதுமக்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சிலம்பு கிராமத்தில் சுமார் 75 ஆண்டுகளுக்கு மேல் தங்கள் முன்னோர்கள் பத்திரப்பதிவு செய்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் நிலங்களுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு போகும் போது இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் எனக் கூறி மறு பத்திரம் பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் தங்கள் பிள்ளைகளின் கல்விக்காகவோ திருமண செலவுக்காகவோ மருத்துவ தேவைக்காகவோ எங்கள் நிலங்களை விற்கவோ கடன் பெறவும் முடியாத நிலையில் மிகவும் பாதிப்பு உள்ளாகி வருகின்றன. எனவே தங்கள் நிலங்களை முன்பிருந்தது போலவே அனைத்து உரிமைகளுக்கும் பொருந்துவதற்கு செயல்படுத்தி தருமாறு . கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊர் மக்கள் 50க்கும் மேற்பட்டோர் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Exit mobile version