தரங்கம்பாடி அருகே பூந்தாலை கிராமத்தில் தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடு மற்றும் இடத்தை மீட்டு தர கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பூந்தாடை கிராமத்தை சேர்ந்தவர் அசோக். இவரது தாயார் அஞ்சம்மாள் என்பவருக்கு அதே பகுதியில் அரசு வழங்கிய பட்டா இடம் சர்வே எண் 246/4 அமைந்துள்ளது. இதில் கடந்த 1996-97 இல் கட்டப்பட்ட அரசு தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அப்புராஜபுரம் கீழத்தெருவை சேர்ந்த துரையரசன் என்பவர் அத்துமீறி இவர்களுக்கு சொந்தமான வீட்டில் புகுந்து அடியாட்களை கொண்டு அடித்து விரட்டியுள்ளார். மேலும் அரசு கொடுத்த கான்கிரீட் வீடையும் அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக துரையரசன் மீது பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை பொறையார் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட அசோக் குடும்பத்தினர் இடத்தை அபகரித்த துரையரசன் மற்றும் ரவுடி கும்பல்களிடமிருந்து தங்களுக்கு சொந்தமான வீட்டை மீட்டு தருமாறும் மேற்கண்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் கோரிக்கை மனு அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
