ஹங்கேரி நாட்டுக்கு அனுப்புவதாக கூறி இளைஞர்களிடம் 21 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த நபரிடமிருந்து பணத்தை பெற்று தர வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கற்பகநாதர்குளம் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் என்பவர் அது மகன் பிரகாஷ் (25).
இவருக்கு சிங்கப்பூரில் பணி புரியும் வெங்கட் என்பவர் மூலமாக கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சூசை மாணிக்கம் என்பவரது மகன் ஆரோக்கியராஜ் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.
ஆரோக்கியராஜ் வெளிநாட்டுக்கு அனுப்பும் பணி செய்து வருவதாக கூறி ஹங்கேரி நாட்டில் ரூபாய் 80 ஆயிரம் வரை சம்பளம் பெற்று தரப்படும் என ஆட்களை அனுப்புவதாக கூறியுள்ளார் .
இதனை தொடர்ந்து பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஏழு பேரிடம் முதற்கட்டமாக ஐம்பதாயிரம் ரூபாயும் பின்னர் 2 லட்சத்து ஐம்பதாயிரம் வீதம் தலா 3 லட்சம் ரூபாய் வரை ஆரோக்கியராஜ் பெற்றுக் கொண்டுள்ளார் .
ஆனால் மூன்று ஆண்டுகள் ஆகியும் இதுவரை யாரையும் வெளிநாட்டிற்கு அனுப்பவில்லை. பணத்தை திரும்ப கொடுக்கவும் மறுத்து வருகிறார்.
மேலும் கொலை மிரட்டலும் விடுத்து வருவதாக கூறப்படுகிறது .
இதனால் மன உளைச்சல் அடைந்த இளைஞர்கள் தங்களது பணத்தை திரும்ப பெற்றுத் தர வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
பேட்டி வீரமுத்து பாதிக்கப்பட்டவர் .















