அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனிநபர் விமர்சனத்தில் ஈடுபட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், “செல்வப்பெருந்தகை காங்கிரசுக்கு விசுவாசமானவர் அல்ல; அவர் திமுகவுக்கே விசுவாசமானவர். காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதில் அக்கறை காட்டவில்லை” என இபிஎஸ் விமர்சித்திருந்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பதிலளித்த திருமாவளவன், “இபிஎஸ் தமிழகத்தின் முதல்வர் பதவியில் இருந்தவர். மிக உயர்ந்த பொறுப்பில் இருந்தவர். அந்தப் பொறுப்பின் மரியாதைக்கும், அவருடைய அனுபவத்திற்கும் சமூகத்தில் நல்ல மதிப்பு உண்டு. அப்படி ஒரு நிலையில் இருக்கும் அவர், தனிநபர் மீது விமர்சனங்கள் செய்வது அதிர்ச்சியாக இருக்கிறது. இது அவருக்கும், அவருடைய அரசியலுக்கும் உகந்ததல்ல” எனக் கூறினார்.

















