மயிலாடுதுறை அருகே சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் 50-க்கு மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மறையூர் ஊராட்சி சிறுகோவங்குடி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கிராம மக்கள் அருகாமையில் உள்ள பகுதியில் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தினர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50- க்கு மேற்பட்டோர் இன்று மயிலாடுதுறை- திருவாரூர் பிரதான சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனர். சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இப்போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
