தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், 70வயது நிறைவடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், கமுட்டேஷன் திரும்ப செலுத்தும் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 11 ஆண்டுகளாக குறைத்து விட வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை உடனே தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், மாநில துணைத்தலைவர் சந்திரசேகரன், மாவட்ட செல்லதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

















