கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். சிவவனின் தேவாராப்பாடல் பெற்ற 229வது தலமாகும்.
இறைவி அரூபமாக இருந்து இறைவனை எண்ணித் தவம் புரிந்த இடம். புள்ளியறை இறைவன் திருக்கோயில் அமைந்து நாள்தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது எங்குமில்லாத ஒரு தனிச்சிறப்பு.
சிவன் சித்தராக இருந்து விளையாடி கைவைத்த இடம் என்றும், இந்த சிவகரை தீர்த்தமானது. இதில் கங்கையின் ஒரு கூறு கலந்தது. வாஸ்துபடி ஈசாணி மூலையில் இந்த தீர்த்தம் இருப்பது விஷேசம்.
மத்தியந்தன முனிவர் மகன் பூசித்து வழிப்பட்ட போது பாதிரி மரங்களின் மேலேத்தகுதியாக இருக்கத் தனக்குப் புலிக்காலும், கையும் வேண்டிப் பெற்றுப் புலிக்கால் முனிவர் ஆன தலம் இதுவாகும்.
புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற தலம். இதன் காரணமாகவே இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப்பெறர் பெற்றது. உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு இறைவன் திருவிளையாடல் நிகழ்ந்த திருவுளங்கொண்டு இறைவியுடம் சொக்கட்டான் ஆடினார் பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே. ஆனால் வெற்றி தனக்கே எனக்கூறி பெருமானின் திருக்கண்களை பிராட்டி தன் திருக்கரங்களால் புதைத்தாள்.
இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின. இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள். அதற்கு இறைவன் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார்.

அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும் இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே
தங்கி இறைவனை பூசித்து பேறு பெற்ற தலம். இறைவன் சித்தர் வடிவம் பூண்டு மக்களின் துன்பங்களை நீக்கிய தலம்.
இத்திருக்கோயிலில் வைகாசி விசாகம் 10 நாட்கள் நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் மிகச்சிறப்பான திருவிழா மகா சிவராத்திரி மாசிமாதம் ஆடி பூரம் நவராத்திரி திருவாதிரை உற்சவம் தை அமாவாசை மாசிமகம் 2க்கும் கடல் தீர்த்தவாரி நடக்கும். தேவனாம்பட்டி என்ற ஊருக்கு சுவாமி செல்லும் பவுர்ணமி பஞ்சபிரகார வலம் வருதல் இங்கு சிறப்பாக நடைபெறும்.
அப்பர் சுவாமிகள் உட்கார்ந்த கோலத்தில் காட்சியளிப்பது இந்த சிவ தலத்தில் மட்டுமே காண முடியும். இங்குள்ள் ஈசனை வழிபடுவோருக்கு இனநிம்மதி கிடைக்கும் என்பதும், இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது என்பது ஐதீகம். மேலும் குழந்தைவரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிராத்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.
இத்தலத்தில் விரதமிருந்து சிவகரைத்தீர்த்தத்தில் குளித்தால் நினைத்தது நிறைவேறுகிறது. மேலும் குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபடுகிறார்கள்.















