சென்னை மாதவரம் பகுதியில் கதிர்வேலன் தெருவில் டேக் என்ற பெயரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது இந்தப் பள்ளியில் சுமார் 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் இந்த பள்ளி நிர்வாகம் ஆனது அரசு நிர்ணயம் செய்த கட்டணத்திற்கு மேலாக பல ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதாகவும் நினைத்ததற் ஏல்லாம் பணம் வசூலிப்பதாகவும் கூறி பெற்றோர்கள் இதற்கு முன்பு மூன்று முறை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களை சமரசம் செய்த கல்வி நிர்வாகம் இனி கட்டண உயர்வு இருக்காது எனக் கூறிய நிலையில் தொடர்ந்து கட்டண உயர்வை ஏற்படுத்தி வந்ததை அடுத்து தொடர் போராட்டத்தில் காலை முதல் பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் நான்கு மாணவர்களை மட்டும் பள்ளி நிர்வாகம் பள்ளி சான்றிதழை பெற்று வெளியே செல்லுமாறு அராஜகப் போக்கில் கூறியதாக தெரியவந்துள்ளது
இதனைத் தொடர்ந்து பெற்றோர் பள்ளி வளாகத்தில் அனைத்து பெற்றோரும் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இங்கே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்
சமயம் மாணவர் அமைப்பினரும் இந்த போராட்டத்தில் கலந்துள்ளதால் போலீசாருக்கும் பெற்றோருக்கும் மாணவர் அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது
