மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்ற திருக்கல்யாண வைபத்தை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம்:-
மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோயில், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் ஐந்தாவது தலமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கோயில், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது திவ்யதேசமும் ஆகும். இக்கோயில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் பரிமளரெங்கநாதர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 7-ஆம் திருநாளின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு
உற்சவ மூர்த்திகளான பரிமளரெங்கநாதர் பெருமாள், சுகந்தவனநாயகி தாயார் வசந்த மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டனர். பெருமாள் தாயாருக்கு காப்பு கட்டி மாலை மாற்றுதல், சிறப்பும் பூரணாகுதி திருமாங்கல்ய தாரணம் (திருக்கல்யாணம்) நடைபெற்றது. தொடர்ந்து நலங்கு உற்சவம், சிறப்பு தீபாரதனைகள் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் மேற்கொண்டனர். தொடர்ந்து பெருமாள் தாயார் திருமண கோலத்தில் வெள்ளி ரதத்தில் புறப்பாடு நடைபெற்றது.
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா
