முதலமைச்சராக இருக்கிற தகுதி ஸ்டாலினுக்கு கிடையாது கொடுங்கோல் ஆட்சி தான் என பாமக அன்புமணி ராமதாஸ்

முதலமைச்சராக இருக்கிற தகுதி ஸ்டாலினுக்கு கிடையாது கொடுங்கோல் ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெறுவதாகவும் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்தவர் தான் ஸ்டாலின் என பாமக அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் உரிமையை மீட்க தலைமுறை காக்க நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் திண்டிவனத்தில் இன்று உரிமையை மீட்க தலைமுறை காக்க உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொண்டார். உரிமை மீட்பு நடைபயணத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தினை வணங்கி பேச்சை துவங்குவதாகவும், கொடுங்கோல் திமுக ஆட்சியை அகற்ற வேண்டுமென நடைபயணம் மேற்கொண்டுள்ளதாகவும், வாக்கிற்காக வரவில்லை மாற்றத்தை கொண்டு வரவே நடைபயணம் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

நடைபயணம் மிக முக்கியமானது கொடுங்கோல் திமுக ஆட்சியை அகற்ற வேண்டுமென ஒற்றை நோக்கோடு நடைபயணம் மேற்கொண்டுள்ளதாகவும், திமுக வரவேண்டும் என்று யாரும் தெரிவிப்பதில்லை யார் வரக்கூடாது என்ற கருத்தை மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும் பெண்களுக்கு பாதுக்காப்பு இல்லை கொடுங்கோல் ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவதாக கூறினார்.

மேடையில் நிற்பதற்கு காரணம் நான் பயின்ற ஆசிரியர்கள் தான் தான் பயிலும் போது தேன் மிட்டாய் மாங்காய் பள்ளி கூட வாயிலில் விற்பனையானது இன்று கஞ்சா மிட்டாய் போதை பொருட்கள் தான் விற்பனை செய்யப்படுகிறது. முதலமைச்சராக இருக்கிற தகுதி ஸ்டாலினுக்கு கிடையாது மீண்டும் ஒரு முறை திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம். உலகத்திலையே கொடுங்கோள் ஆட்சி ஹிட்லர் தான் என்று கூறுவார்கள் ஹிட்லர் ஒரு விவசாயியை கைது செய்யவில்லை கொலை செய்யல ஆனால் தமிழகத்தில் உள்ள ஹிட்லர் 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் போட்ட ஆட்சி தான் திமுக ஸ்டாலின் ஆட்சி, திமுக ஆட்சியை மறக்க கூடாது மன்னிக்க கூடாது என் தெரிவித்தார்.

திண்டிவனத்தில் புதியதாக பேருந்து நிலையத்தை ஏரியில் கட்டி உள்ளார்கள் உங்களுக்கு ஏரியின் முக்கியத்துவம் தெரியாதா அறிவு கெட்டவர்கள், முன்னோர்கள் வெட்டி வைத்த ஏரியை பாதுகாக்க வேண்டும் மீண்டும் ஒரு ஏரியை வெட்ட முடியுமா என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் 42 ஆயிரம் ஏரிகள் இருந்ததில் 20 ஆயிரம் ஏரிகள் காணாமல் போய் உள்ளது.

திண்டிவனத்தில் உள்ள சிப்காட்டில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் மூடிவிட்டு செல்லுங்கள் தமிழகத்திலையே அதிகமான டாஸ்மாக் விற்பனையில் புகழ்பெற்றது தான் விழுப்புரம் மாவட்டம் டாஸ்மாக் 109 தான் உள்ளது ஆனால் சந்து கடைகள் 2 ஆயிரம் உள்ளது.உச்ச நீதிமன்றம் தமிழ் நாட்டில் உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என கூறி 1250 நாட்கள் ஆகிறது இன்று வரை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை
வன்னியர்களுக்கு துரோகி ஸ்டாலின் அவருக்கு வாக்களிக்க கூடாது.

இடஒதுக்கீடு வழங்க மனமில்லை எல்லா தரவுகள் நிர்வாகம் இருந்தும் கொடுக்காமல் உள்ளார். தந்தை முதலமைச்சர் மகன் துணை முதலமைச்சராக வருவார் இடஒதுக்கீடு 10.5 இல்லை 15 சதவிகிதம் வழங்க வேண்டும்

எல்லா சமுதாயத்தினருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென போராடி வருவதாக கூறினார். திட்டமிட்டு பெரிய அளவில் இடஒதுக்கீடு வழங்க சிறை நிரப்பும் போராட்டம் செய்வோம் என்றும் கர்நாடா, ஆந்திரா, பீஹார் முதலமைச்சருக்கு இதே அதிகாரம் தான் உள்ளது அங்கு மட்டும் சாதி வாரி கணக்ககெடுப்பு செய்கிறார்கள் ஆனால் தமிழகத்தில் கணக்கெடுப்பு எடுக்க முடியவில்லை அதிகாரம் வைத்து கொண்டு அதிகாரமில்லை என கூறுபவர் தான் ஸ்டாலின் அவர் ஒரு கோழை அவருக்கு சமூக நீதி பேச தகுதியில்லை சமூக நீதியின் துரோகி எந்த மேடையில் பேசவும் தயார் வாதம் பேச தயாராக உள்ளதாகவும், வயிறு எரிகிறது கொடுக்குறோம் கொடுக்கிறோம் என திருப்பதி லட்டு அல்வாவை ஸ்டாலின் கொடுத்திருக்கிறார் என குற்றஞ்சாட்டினார்.

விடியல் எங்கே புத்தகம் வெளியிட்டேன் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் 505 வாக்குறுதிகள் கொடுத்தார்கள் அனிதா நீட் தேர்வில் இறந்ததை அரசியலாக்கி நீட் தேர்வினை ரத்து செய்வோம் என்றார்கள் அதனை செய்யவில்லை, திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளில் 66 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றி உள்ளார்கள் ஆனால் 98 விழுக்காடு நிறைவேற்றி விட்டதாக மேடைக்கு மேடை தெரிவிக்கிறார்கள் கடந்த தேர்தலில் அரசு ஊழியர்கள் வரிஞ்சி கட்டிக்கிட்டு திமுகவிற்கு வாக்கு சேகரித்தார்கள் இன்று போராடும் நிலை தான் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப்பொருட்களை திமுகவினர் தான் விற்பனை செய்கிறார்கள், ஜாபர் சாதிக் என்ற திமுக நிர்வாகி போதை மாத்திரை விற்பனை செய்திருக்கிறார். இவர்களை போன்றவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது திமுக ஸ்டாலின் தான் நெசவாளர்கள் கஷ்டபடுவது குறித்து ஸ்டாலினுக்கு கவல இல்லை என தெரிவித்தார்.

ஜெர்மணிக்கு முதலீடு ஈர்க்க ஸ்டாலின் சென்றுள்ளார் இதற்கு முன்னதாக முதலீடு ஈர்க்க சென்று எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு எவ்வளவு முதலீடு கொண்டுவந்தார்கள் என்று அடுத்து புத்தகமாக வெளியிட உள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Exit mobile version