தமிழகம் முழுவதும் ஆறு கோடி பண விதைகளை நடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஊராட்சி மன்ற செயலாளர் தலைமையில் ஊராட்சிக்குட்பட்ட நீர்நிலை பகுதிகளில் சுமார் 5000 பனைமரம் நடும் பணியானது நடைபெற்று வருகிறது. இது தன்னார்வலர்கள் மற்றும் பனைமர இயக்கங்கள் இணைந்து பனை விதைகளை நடும் பணியானது தீவிரமாக செயல்படுத்து வருகின்றன. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு பனைமரம் பார்க்கும் இயக்கம் சார்பில் இன்று ஆயிரம் பனைமரம் நடும் துவக்க விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாணவ மாணவிகள் பனை மரத்தை பாதுகாக்கும் உறுதிமொழி எடுத்துக்கொண்டன. இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள், தமிழக பனைமரம் காக்கும் இயக்க நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.

















