மயிலாடுதுறை அருகே சந்திரபாடி ஊராட்சி தெற்கு தெருவில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா; 100 க்கனக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சந்திரபாடி ஊராட்சி தெற்கு தெருவில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆண்டு தோறும் நடைபெறும் பால்குடம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு மீனவ கிராமத்தில் உள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் இருந்து காப்பு கட்டி விரதமிருந்து அம்மனுக்கு உகந்த மஞ்சள் உடை உடுத்திய 100 க்கனக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் அலகு காவடி எடுத்தும் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக மேலத்தெரு சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தை வந்தடைந்தனர். பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த கொண்டு வந்த பாலைக்கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


